Friday, January 8, 2010

புகைபோட்டு பழுத்த பழம்


புகைபோட்டு பழுத்த பழம்.

யாருமே விரும்பவில்லை.

விரும்பியது...
கேன்சர் மட்டும் என்னை!

சுட்ட தவறு.!


தவறு சுட்டது.
ஆம்!

தவறியது கையில் இருந்த தம்.

எச்சிளங்குழந்தை!


மிருதுவான ஸ்பரிசத்தால்...
என்னை வருடினாள்!
ஆவலில் விழித்தேன்.
அதிர்ச்சியால் துடித்தேன்.

என்னை வருடியது தாய் அல்ல!
ஒரு நாய்!

என் தொட்டில் இடமாற்றப்பட்டிருந்தது.
குப்பைத் தொட்டிக்கு.

தன்னுடைய தேவை பூர்த்தியானதும்...
தானே கிளம்பியது...
பெயர் தெரியாத என் அப்பன் ஆத்தாளைப் போலவே...
நாயும்.

போகிற போக்கில்...
என்னை அலங்கரித்திருந்த சோற்றையும்,
சாற்றையும்,
சுத்தம் செய்து விட்டுப் போயிருந்தது
தன் நாவால்...
நாலுகால் நன்றியுள்ள ஜீவன்.

என்னை மட்காத குப்பையில் வீசிய,
என் தாயின் நினைவை,
இப்போதே மட்கும் குப்பையாக்கிவிட்டேன்.

ஆனால்...
அலைமோதிய கூட்டத்திலிருந்து...
எனக்குப் பெயர் சூட்டிய பெரியவர்...
அவள் நினைவை புதைக்க விடுவதாயில்லை..!

என் பெயரோடு...
என் தாயின் பெயரையும்...
சேர்த்தே வைத்தார்...
ஆம்..!
"என் பெயர் தேவடியா பையன்!"

என்னைப் பார்த்து முணுமுணுக்கிற கூட்டத்திற்கு...
என் கத்தலும், கதறலும்,
சொல்லாமல் சொல்லும் வார்த்தைகள்...

"என் தாயை நாயாக்கியதும்,
என்னை நாதியற்றவனாக்கியதும்...
உங்களைப் போன்ற நல்லவர்கள் தான்!"

நாதியற்று...!


நாளைய சமுதாயம்
நாதியற்று உறங்குகிறது
நடுரோட்டில்
அனாதைக் குழந்தை!